Saturday, February 15, 2025

ஜெகபர் அலி உடலை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது லாரி மோதியது. இதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜெகபர் அலி உடலை மீண்டும் தோண்டி எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மரணத்தில் வேறு ஏதாவது மர்மங்கள் உள்ளதா? ஏற்கனவே அவர் தாக்கப்பட்டாரா? அல்லது லாரி மோதிதான் உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Latest news