குஜராத்தில், கடந்த 2022-ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம், பூபேந்திர படேல் 2-வது முறையாக முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். அவரது அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் பூபேந்திர படேலை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
நேற்று அறிவித்தபடி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. கடந்த அமைச்சரவையில் இருந்த 9 பேருக்கு இந்த முறை அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைச்சரவையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாட இடம்பெற்றுள்ளார். அவர், கடந்த 2019-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த நிலையில், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
