Wednesday, April 2, 2025

”கடந்த 5 வருஷமாவே இப்படித்தான்” CSKவை ‘தோலுரித்த’ ஷேவாக்

நடப்பு IPL தொடரில் சென்னை-மும்பை அணிகளுக்கு இடையே, அதிக தோல்வியை தழுவுவது யார்? என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தலா 2 தோல்விகளுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 155 ரன்களையே சென்னை பேட்ஸ்மேன்கள் தடவி, தடவித்தான் எடுத்தனர்.

தொடர்ந்து RCBக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்திலும் சென்னை வீழ்ந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருக்கிறது. இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர ஷேவாக் CSKவை விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், ” கடந்த 5 வருடங்களாகவே 180 அல்லது, அதற்கு மேற்பட்ட ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சேஸிங் செய்ய முடியவில்லை. அவர்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவரும்,” என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

கேட்க கசப்பாக இருந்தாலும் சென்னை அணியின் தற்போதைய நிலைமை இதுதான். இந்த ஆண்டு பிளே ஆப்க்கு செல்லும் அணிகளில் ஒன்றாக CSKவை, எந்தவொரு முன்னாள் வீரரும் கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news