Thursday, July 31, 2025

இஸ்ரேலின் ஆட்டம் காலி! பிரிட்டன் வைத்த ஒற்றைச் செக்! last warning கொடுத்த ‘கெய்ர் ஸ்டார்மர்’!

இஸ்ரேலுக்கு பிரிட்டன் வைத்த செக்! இது ஒரு சாதாரண மிரட்டல் அல்ல… இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க எச்சரிக்கை!

“காசாவில் நடக்கும் இந்த செயற்கைப் பஞ்சத்தை நீங்கள் நிறுத்தவில்லை என்றால், பாலஸ்தீனத்தை நாங்கள் தனி நாடாக அங்கீகரிப்போம்” என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விடுத்திருக்கும் இந்த ஒற்றை அறிவிப்பு, இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

காசாவின் நிலைமை இன்று உலகையே உலுக்குகிறது. போர் மரணங்கள் 60,000-ஐத் தாண்டிவிட்டது. அதைவிடக் கொடுமை… உணவுக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உலக நாடுகள் அனுப்பும் உணவு லாரிகளை, இஸ்ரேல் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி, ஒரு செயற்கையான பட்டினிப் பஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு, பிரிட்டனின் பொறுமை இப்போது எல்லை மீறிப் போயிருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஸ்காட்லாந்தில் ரகசியமாகப் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவை பிரதமர் ஸ்டார்மர் தன்னிச்சையாக எடுக்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள 650 எம்.பி-க்களில், மூன்றில் ஒரு பங்கான 250 எம்.பி-க்கள், “பாலஸ்தீனத்தை உடனடியாகத் தனி நாடாக அங்கீகரியுங்கள்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பால் இஸ்ரேல் கொந்தளித்துப் போயிருக்கிறது. “பிரிட்டனின் இந்த முடிவு, ஹமாஸ் தீவிரவாதிகளுக்குக் கிடைத்த வெற்றி” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காத 53 நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நாடு, இன்று இஸ்ரேலுக்கு எதிராகத் தன் கையில் இருக்கும் கடைசி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது.

பிரிட்டனின் இந்த மிரட்டல், இஸ்ரேலைப் பணிய வைக்குமா? காசாவின் செயற்கைப் பஞ்சத்திற்கு ஒரு முடிவு கட்டப்படுமா? பாலஸ்தீன மக்களின் பட்டினிக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா?

என்பதே இப்போது பெரும் கேள்வியாக இருக்கின்றது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News