Sunday, June 22, 2025

இஸ்ரேலா! ஈரானா ? முரட்டு அடி அடித்த அமெரிக்கா! யார் உண்மையான ராணுவ ராட்சசன்?

மத்திய கிழக்கை மிரட்டும் ஒரு மோசமான மோதல்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இரு நாடுகளும் தங்களுடைய தாக்குதல் விருப்பங்களை திறந்துவிட்டன.

சமீபத்தில், ஈரான் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா ஒன் (Fattah-1) மூலம் டெல் அவிவை தாக்கியது. இது சாதாரண தாக்குதல் இல்லை… ஹைப்பர்சோனிக் என்பது குறிக்கவே, ஒலி வேகத்தைவிட பல மடங்கு வேகத்தில் பாயும் அதிநவீன ஏவுகணை.

இதேநேரத்தில், ஒரு மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. அமெரிக்கா நேரடியாக ஈரானின் மூன்று அணுஆயுத உற்பத்தி நிலையங்களை (Nuclear Facilities) தாக்கியது. இந்த தாக்குதல், ஈரானின் உச்ச ரகசிய அணு செயல்பாடுகளை நெருக்கமாக குறிவைத்து நடந்தது. இதனால் மத்திய கிழக்கு மட்டுமல்ல, உலகமே பதற்றத்தில் மாட்டிக்கொண்டது.

ஈரானின் தாக்குதல்களும் இதற்கு முன்னதாகவே நடந்துவந்தன. 2024ல், ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் டூ (Operation True Promise II) என்ற நடவடிக்கையின் கீழ், ஈரான் கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) இஸ்ரேலின் முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் மொசாட் தலைமையகத்தை நோக்கி ஏவியது.

இஸ்ரேலும் அமைதியாக இருக்கவில்லை. வான்வழித் தாக்குதல்கள் (Airstrikes), ஏவுகணைகள் (Missiles), மற்றும் தற்கொலை ட்ரோன்கள் (Suicide Drones) மூலம் பதிலடி கொடுத்தது.

இப்போது கேள்வி ஒன்றே… யாரிடம் அதிக ஆயுதங்கள் இருக்கின்றன?

ஈரான் ஒரு பெரிய இராணுவ சக்தி. அதன் கட்டுப்பாட்டில் புரட்சிகர காவல்படை (Revolutionary Guard) மற்றும் சைபர் படை (Cyber Force) இருக்கின்றன. மொத்தமாக 6 லட்சம் வீரர்கள், மேலும் 2 லட்சம் புரட்சிகர படை வீரர்கள் இருக்கிறார்கள்.

விமானப்படையில் 186 போர் விமானங்கள் (Fighter Jets), 129 ஹெலிகாப்டர்கள் (Helicopters), மொத்தம் 551 விமானங்கள் இருக்கின்றன. நிலைப்படையில் 1996 டாங்கிகள் (Tanks), 65,000 கவச வாகனங்கள் (Armored Vehicles), 775 மல்டிப்பிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம்களும் (MLRS) இருக்கின்றன.

கடற்படையில் 7 போர்க்கப்பல்கள் (Warships), 3 கோர்வெட்கள் (Corvettes), 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் (Submarines), மற்றும் 19 ரோந்து கப்பல்கள் (Patrol Vessels) உள்ளன.

ஈரானிடம் உள்ள முக்கிய ஏவுகணைகள் என எடுத்துக்கொண்டால்,
ஷஹாப் (Shahab), ஃபதே 110 (Fateh-110), சோல்ஃபாகர்(Zolfaghar), கோர்ராம்ஷஹர் (Khorramshahr), மற்றும் ஹைப்பர்சோனிக் ஃபட்டா ஒன் (Fattah-1) போன்ற ஆயுதங்கள் இருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தொழில்நுட்பத்தில் மிக மேம்பட்ட நாடு.
1,70,000 செயலில் உள்ள வீரர்களுடன், 612 விமானங்கள் (Military Aircraft) உள்ளன. அதில் 241 போர் விமானங்கள், குறிப்பாக எஃப் 35 ஸ்டெல்த் விமானங்கள் (F-35 Stealth Jets) முக்கியமனதாக இருக்கின்றன.

மேலும் டாங்கிகளில் ஈரானை விடக் குறைவாக 1370 மட்டுமே இருந்தாலும், கடற்படையில் இஸ்ரேல் முன்னிலைப் பெற்றுள்ளது. 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் (Submarines), மற்றும் 45 ரோந்து கப்பல்கள் (Patrol Vessels) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

எண்ணிக்கையில் ஈரான் மேலோங்கினாலும், இஸ்ரேலின் தொழில்நுட்ப மேன்மை மற்றும் அதிநவீன ஆயுதங்கள், அதை ஒரு உலக ரீதியிலான ராணுவ சக்தியாக மாற்றியுள்ளன.

இப்போது, அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியதால், இந்த மோதல் ஒரு பகிரங்க போராக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் அணுஆயுத உற்பத்தி குறிவைத்த தாக்குதல்கள், மறுபக்கத்தில் ஹைப்பர்சோனிக் மிசைல்கள்… என்று இது உலகத்தையே வெடிக்க வைக்கும் விதமாக மாறிவருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news