நாம ஐஸ்கிரீம்-ன்னு நெனச்சு வாங்குவதெல்லாம் ஐஸ்கிரீம்-மே இல்லை? ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் ஆபத்து!

நாம் கடைகளில் வாங்கும் “ஐஸ்கிரீம்” என்ற பெயரில் விற்கப்படும் சில பொருட்கள் உண்மையில் ஃப்ரோசன் டெசர்ட் தான். இவற்றை சுவையில் வேறுபாடு தெரியாமல் பலர் ஐஸ்கிரீம் என நினைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது.

ஐஸ்கிரீம் தயாரிக்க பசும்பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஃப்ரோசன் டெசர்ட் தயாரிக்க பால் பதிலாக பாம்ஆயில் போன்ற வெஜிடபிள் ஆயில், செயற்கை சுவை மற்றும் நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் உற்பத்தி செலவு குறைந்தாலும், தரமும் சேர்ந்து குறைகிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, ‘ஃப்ரோசன் டெசர்ட் சுவைக்கு கவர்ச்சியாக இருந்தாலும், அதில் உள்ள டிரான்ஸ் ஃபேட் மற்றும் ஹைட்ரஜனேட்டெட் ஆயில் அதிகமாக உடலுக்குள் சென்றால், இதய நோய், உயர் ரத்த கொழுப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலையியல் ஆணையம் அதாவது FSSAI விற்பனையாளர்கள் தெளிவாக “Ice Cream” மற்றும் “Frozen Dessert” என்று தனித்தனியாக லேபிள் ஒட்ட வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது. இருப்பினும், சிலர் இன்னும் வாடிக்கையாளர்களை குழப்பும் வகையில் விற்பனை செய்கின்றனர்.

அதனால், நுகர்வோர் கடையில் வாங்கும்போது லேபிளை கவனமாகப் பார்த்து வாங்குவது அவசியம். உண்மையான பால் கலந்த ஐஸ்கிரீம் சற்றே விலையுயர்ந்ததாக இருந்தாலும், ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானது. ஆனால் அடிக்கடி ஃப்ரோசன் டெசர்ட் சாப்பிடுவது நீண்டகாலத்தில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

Related News

Latest News