Thursday, February 19, 2026

3ம் உலகப்போர் தொடங்குகிறதா? நேரடியாக ரஷ்யாவை எச்சரிக்கும் நேட்டோ! சர்வதேச அரங்கில் பரபரப்பு!

ருமேனியா, எஸ்தோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் வான் எல்லைகளுக்கு ரஷ்ய போர் விமானங்கள் அண்மையில் அத்துமீறிய சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்தோனியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களில் மூன்று MiG-31 ரஷ்ய போர்விமானங்கள் எஸ்தோனியாவின் வான் எல்லைக்குள் நுழைந்து சுமார் 12 நிமிடங்கள் அத்துமீறல் நடந்தது. இதுவே முன் எப்போது அனுபவிக்கப்படாத அளவில் விமரிசிக்கப்பட்டது. உடனே நேட்டோ படைகள் களமிறங்கிய பின்னர் அந்த விமானங்கள் எல்லையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், போலந்து வான எல்லையிலும் ரஷ்ய விமானங்கள் புகுந்துள்ளன என்று தகவல்கள் வந்தன. மேலுமொரு சம்பவமாக ருமேனியாவின் வான் பரப்பில் ட்ரோன் தாக்குதல் போன்ற அத்துமீறல்கள் பதிவு செய்யப்பட்டது. இது மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் உக்ரைன்–ரஷ்ய போர்களில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ருமேனிய எல்லைக்குள் ட்ரோன்கள் நுழைந்தது பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு வந்தது.

இந்த பின்னணித் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ரூபத்தில் ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேட்டோ அறிக்கையில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஆபத்தான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அத்துமீறல்கள் தொடர்ந்தால் ராணுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை போதுமான கட்டுப்பாடுகள் இல்லாமல் நீடிக்கும் இந்த மோதல்களால் பிராந்திய அரசியல் சூழ்நிலை உறுதியற்றதாக மாறியுள்ளது. குறிப்பாக உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் கூறி இருந்தார். ஆனால் ஜெலன்ஸ்கி அதை ஏற்கவில்லை. எனவே கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. அன்று தொடங்கி இன்று வரை போர் நடந்து வருவதால் உலக அளவில் பதற்றம் நீடிக்கிறது.

Related News

Latest News