Tuesday, October 7, 2025

விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? BCCI-யின் அதிர்ச்சி முடிவு!

இந்திய கிரிக்கெட்டின் இரண்டு கண்கள், கிங் கோலி மற்றும் ஹிட்மேன் ரோஹித் சர்மா… இவர்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? இந்த இரண்டு ஜாம்பவான்களும் இனி இந்திய அணியில் ‘முன்னாள் வீரர்கள்’ ஆக மாறப் போகிறார்களா? இப்படி ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டு, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஒரு புதிய அறிக்கை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI, 2027-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையை இப்போதே குறிவைக்கத் தொடங்கிவிட்டது. அதற்காக, ஒரு புதிய, இளம் அணியைக் கட்டமைக்கும் வேலையில் தேர்வுக்குழு இறங்கியுள்ளது. இதன் முதல் படியாகத்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோஹித் சர்மா அணியில் இருந்தும், கேப்டன் பொறுப்பு சுப்மான் கில்லிடம் கொடுக்கப்பட்டது.

இது, இந்த இரண்டு சீனியர் வீரர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு மறைமுக எச்சரிக்கை என்கிறது அந்த அறிக்கை. “ஒன்னு நல்லா விளையாடுங்க, இல்லைனா டீமை விட்டு வெளியே போங்க” (Perform or Perish) என்ற கடுமையான செய்தியை தேர்வுக்குழு அனுப்பியுள்ளது.

இனிமேல், அவங்களோட பழைய சாதனைகளோ, பெரிய பெயரோ செலக்‌ஷனுக்கு உதவாது. அந்தந்த மேட்ச்ல எப்படி விளையாடுறாங்களோ, அதை வெச்சுதான் டீம்ல இடம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த மூன்று போட்டிகளுக்குப் பிறகு, இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு இன்னொரு முக்கியக் காரணம், அவர்களின் வயது. 2027 உலகக் கோப்பை வரும்போது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயது ஆகிவிடும். அதனால், அவர் தேர்வாளர்களின் நீண்ட காலத் திட்டத்திலேயே இல்லை என்று BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலியும், ரோஹித்தும் கடைசியாக கடந்த மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, சுமார் ஏழு மாதங்களாக எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பிறகு, அவர்களால் பழைய ஃபார்முக்குத் திரும்ப முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

புதிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ஆலோசகர் கௌதம் கம்பீர், அணிக்கு “புதிய, இளம் வீரர்களைக்” கொண்டு வருவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால், பல கோடி ரசிகர்களின் இதயத்துடிப்பாக இருக்கும் இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும், இந்திய அணியின் கதவுகள் மெல்ல மெல்ல மூடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News