Tuesday, January 20, 2026

கைதாகிறாரா விராட் கோலி? கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி IPL-லின் 18 வருட கடும் போராட்டத்துக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை தன் வசமாகியது. அந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் தற்போது பூதாகரமாகி வெடித்துள்ளது. காவல்துறையை மீறி பேரணி அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகத்தின் மீது நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று RCB வெற்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் கர்நாடக போலீசார் அனுமதி மறுத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்தியதே அசம்பாவிதத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தை போலவே கடந்த ஆண்டும் ஒரு விபரீதம் நடந்தது. அதாவது கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது தகவல் தெரிவிக்காமல் திடீரென அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்தார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், இதற்கு அல்லு அர்ஜூன் தான் காரணம் என கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் விராட் கோலியை ரசிகர்கள் பார்க்க வந்ததால் தான் இப்படியான அசம்பாவிதம் நடந்தது என்பதால் இந்த விவகாரத்தில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் arrestkohli என்ற ஹேஷ் டேக்கும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.

கூட்டநெரிசலைப்பற்றி வீரர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுதான் 11 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். மேலும், விராட் கோலி உள்ளிட்ட ரசிகர்கள் கைது செய்ய வேண்டும் என்றும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Related News

Latest News