Tuesday, December 30, 2025

எம்.ஜி. ஆரை Follow செய்யும் விஜய், திருச்சியை குறிவைத்தது இதற்குத்தானா?

திருச்சி, தமிழக அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாழ்வின் முக்கிய அத்தியாயங்களை இங்கிருந்தே தொடங்கியவர். மரக்கடை பகுதி, எம்.ஜி.ஆர். பல மேடைகள் ஏறி அரசியல் உரையாற்றிய இடமாக நினைவுகூரப்படுகிறது. அந்த உணர்வோடு தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் தனது முதலாவது மாநில தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார்.

விஜய் இதுவரை மக்கள் தொடர்பை திரைப்படங்கள், தொண்டு பணிகள் மூலம் மேற்கொண்டு வந்தார். ஆனால் நேரடி அரசியல் பிரவேசத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளமாகவும், வலுவான தொடக்கமாகவும் திருச்சியை தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு அரசியல் கணக்கு போடப்பட்டதாக பார்க்கப்படுகிறது. திருச்சி, தமிழகத்தின் புவியியல் மையப்பகுதியாகவும், அரசியல் அடையாளம் கொண்ட மாவட்டமாகவும் இருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் “மத்திய புள்ளியில் இருந்து ஆரம்பம்” என்ற அரசியல் செய்தியை மக்கள் மனதில் பதிக்க முடியும்.

மரக்கடை பகுதியின் வரலாறு, விஜயின் தொடக்கத்தை எம்.ஜி.ஆர். நினைவோடு இணைத்து காட்டுகிறது. இது, “மக்கள் மனதில் எளிதில் பதியும் அரசியல் பிரவேசம்” என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதே சமயம், திருச்சி நகரம் கல்வி, தொழில், விவசாயம் என பல துறைகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு சமூகங்களும், அரசியல் பாதிப்புகளும் கலந்து வாழும் இந்த பகுதி, தேர்தல் அரசியலுக்கு ஒரு சோதனைக் கூடம் என்றே கூறலாம்.

எனவே, விஜய் திருச்சியை தேர்வு செய்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. அது வரலாற்றையும், அரசியல் உத்திகளையும், எதிர்காலக் கனவையும் ஒருங்கிணைக்கும் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் பெருங்கடலில் விஜய்க்கு நீந்த தெரிகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News