தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் அக்கட்சியின் தலைவர் விஜய் இறங்கியுள்ளார்.
முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது.
இந்தநிலையில், தவெக கட்சிக்கு “மோதிரம் சின்னம்” ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் “ஆட்டோ சின்னம்” கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
