மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு போன்ற பல சொற்களால் இதனைக் குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய காடுகள் எது என்று தெரியுமா??
- மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் ஆகும்… இந்தக் காடுகளில் தான் அதிகமாக புலிகள் வாழ்கிறது. இது பசுமை மாறா காடுகளாகும். இந்த காடுகளை ஒட்டிய ஆற்றுப்பகுதியில் தான் அதிகமாக சணல் பயிரிடப்படுகிறது.இந்த காடு இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு நாடுகளிலும் பரவியுள்ளது.
அடுத்தது, மேகாலயா ஷில்லாங் பகுதிகளில் உள்ள மோப்லாக் டேக் ரெஸ்ட் காடுகள் ஆகும் … வடகிழக்கு இந்தியாவில் உள்ள பசுமை மாறா காடுகள். இவை உலகிலேயே அழகான அருவிகளைக் கொண்டவை. மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் பகுதியில் உள்ள ஒரு புனிதமான காடாக கருதப்படுகிறது.
அடுத்ததாக, தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் உள்ள மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகள் இவை 25 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பறந்து விரிந்து காணப்படுகிறது… மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகள், அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
அடுத்தது,குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் இந்தியாவிலேயே இந்தக் காடுகளில் மட்டும்தான் சிங்கம் வாழ்கின்றன. இந்த காடு இந்த இனங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை வழங்குகிறது…
அடுத்ததாக,நீலகிரி மலைக் காடுகள் இந்தக் காடுகள் பல்லுயிர்கள் வாழும் இடமாக உள்ளன. நீலகிரி மலைக் காடுகள் 100 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரந்து விரிந்து காணப்படுகின்றன.மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பகுதி ஆகும். இது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. நீலகிரி மலைகள் “மலைகளின் அரசி” என்று அழைக்கப்படும் உதகமண்டலம் மற்றும் குன்னூர் போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.