இந்த நகரைத் தெரியாமல் யாராவது இருக்கீங்களா?

357
Advertisement

வூஹான்…

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா
25 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள்
22 மாகாணங்கள் சீன மக்கள் குடியரசு (PRC) நிர்வாகத்தில்
உள்ளது.

23 ஆவது மாகாணமான தைவான் சீன மக்கள் குடியரசு
நிர்வாகத்திற்கு உட்படாத- ஆனால், சுதந்திரமாக செயல்பாடும்
நாடாகும்.

ஹாங்காங், மகாவ் ஆகிய இரு மாகாணங்களும் சீனாவின்
சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

சீனாவின் 22 மாகாணங்களுள் ஒன்றுதான் ஹீபேய். இந்த
மாகாணத்தின் தலைநகர்தான் வூஹான். மத்திய சீனாவில்
அமைந்துள்ளது இந்நகரம்.

யாங்ஷே மற்றும் ஹான் ஆகிய ஆறுகள் சந்திக்கும் இடத்தின்
கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. வுசாங், ஹனோகு, ஹான்யங்
ஆகிய மூன்று நகரங்களை உள்ளடக்கிய ஒரு பெருநகரம்தான்
வூஹான்.

உலகின் மிகப்பெரிய மூன்றாவது பெரிய யாங்ஷி ஆற்றின்
நடுவே தி ஜோர்ஜஷ் எனும் அணை இந் நகரில்தான் உள்ளது.

யாங்ஷி ஆற்றின் தென்கரையிலுள்ள நகரான வுச்சாங்
என்பதன் முதல் எழுத்தையும், வடகரையிலுள்ள நகரான
ஹாங்கோ என்பதன் முதல் பகுதியையும் சேர்த்து வுஹான்
என்று இந்நகருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தான் இவ்விரு நகரங்களும்
ஒன்றாக இணைக்கப்பட்டு வூஹான் என்ற பெயரில் அனழக்கப்பட்த்
தொடங்கியது. இந்த மூன்று நகரங்களும் பாலத்தால் ஒன்றாக
இணைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பிற நகரங்களை இணைக்கும் வகையில் வுஹான்
நகரின் வழியாக ரயில்கள், பேருந்துப் போக்குவரத்துகள்
நடக்கின்றன. இதனால் வூஹான் நகரை சீனாவின் பொதுச்
சாலை என்று அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர்.

உள்நாட்டுப் போக்குவரத்திற்கு சிறப்பான விதத்தில் பயன்படுவதால்
இந்நகரை சீனாவின் சிகாகோ என்று சீன ஊடகம் வர்ணிக்கின்றது.

இந்நகரில் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. அரசியல்,
பண்பாடு, பொருளாதாரம், கல்வி ஆகியவற்றுள் சிறந்து விளங்குவதால்
வூஹான் சீனாவின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

1927 ஆம் ஆண்டில் சிறிது காலம் அப்போதைய சீனாவின்
தலைநகராவும் இருந்தது. இரண்டாவது சீன, ஜப்பான் போரின்போது
1937 ஆம் ஆண்டில் சீனாவின் போர்க்காலத் தலைநகராகவும் இருந்தது.
கிமு 1500 முன்பே புகழ்பெற்ற நகரமாக வூஹான் இருந்துள்ளது.

பத்து மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரம்.
சீனாவின் மிகப்பெரிய நகரங்களுள் இந்த வூஹான் நகரமும் ஒன்று.
கோடைக்காலம், குளிர்காலம், வசந்த காலம், இலையுதிர்க் காலம்
என்று நான்கு பருவ நிலைகளைக் கொண்டது இந்நகரம்.
கோடைமழையும் இங்கு பெய்கிறது.

பல ஆண்டுகளாக வூஹான் நகரம் ஒரு உற்பத்தி நகரமாக
விளங்கிவந்துள்ளது. இந்நகரில் 3 தேசிய மேம்பாட்டு மண்டலங்கள்,
4 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பூங்காக்கள்,
350க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், 1656 உயர் தொழில்
நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள்,வூஹான் பல்கலைக் கழகம்,
ஹீவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்
கழகம் உள்பட பல உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

விஞ்ஞான ஆராய்ச்சிகளை வெளியிடுவதில் உலகளவில் 13 ஆவது
இடத்திலும், சீனாவில் நான்காவது இடத்திலும் உள்ளது வூஹான் நகரம்.