Sunday, October 5, 2025

தங்கம் விலை குறையப் போகிறதா? நகை பிரியர்களுக்கு Good நியூஸ்! இது தான் அந்த காரணம்!

இந்தியாவில் தங்கம் எப்போதும் முதலீட்டிற்கும், பாதுகாப்பான புகலிடத்திற்கும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமண காலம் நெருங்குவதால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை நிறைவேற்ற இந்தியா அதிகளவு தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சாதனை அளவுக்கு உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் அதேபோல் வேகமாக அதிகரித்து, நடுத்தர மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கங்கங்கள், மத்திய கிழக்கு மோதல்கள், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. 2025 செப்டம்பர் தொடக்கத்தில் தங்க விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,750 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

தங்க இறக்குமதிக்காக இந்தியா 2018-19 ஆம் ஆண்டு 32.9 பில்லியன் டாலர் செலவிட்ட நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் 58 பில்லியன் டாலர் வரை சென்றது. 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே இறக்குமதி 16.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது வர்த்தக சமநிலைக்கு பெரிய சுமையாக உள்ளது.

உள்ளூர் உற்பத்தியை சந்திப்பதற்கு, 2024-25-ல் இந்தியா வெறும் 1.62 டன் தங்கத்தையே வெட்டி எடுத்தது. இதில் பெரும்பாலானது கர்நாடகாவிலிருந்தே வந்தது. ஆனால் விரைவில் சுரங்கத் துறையில் புதிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆந்திராவின் ஜோனகிரியில் ஆண்டுதோறும் 750 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்படுகிறது. அதேபோல், 2001 முதல் மூடப்பட்டிருந்த கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இங்கு பழைய கழிவுகளில் இருந்து தங்கம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் நவீன தொழில்நுட்பத்தால் பிரித்தெடுக்கப்படும். இந்த முன்னேற்றங்களுக்கு தனியார் முதலீட்டும், வெளிநாட்டு நிதியும் அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை குறையலாம் என கணிக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News