தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது நகை வாங்குவோர் மதியிகள் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 22 கேரட் தங்க நகைகளுடன் 9 கேரட் நகைகளும் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றன. இவை பாதுகாப்பானதா? சிறப்பான முதலீடா? யாரெல்லாம் வாங்கலாம்? என்பதை இதில் பார்ப்போம்.
9 கேரட் நகைகள் பாதுகாப்பானவையா என்ற கேள்விக்கு, அவை அலங்கார நோக்கத்திற்காக அணிய பரிந்துரைக்கப்படுகின்றன. 9 கேரட் நகைகளில் 37.5% தங்கம் மட்டுமே இருக்கும், மீதம் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்கள் கலந்திருக்கின்றன. இதனால், இந்த நகைகள் வெளியே தங்கம் போல் தோன்றினாலும் முதலீட்டுக் கண்ணோட்டத்தில் மதிப்பை தராது. 9 கேரட் நகைகள் பளபளப்பிலும் 22 கேரட் தங்க நகைகளுக்கு மாறாக குறைவாக இருக்கும்.
இந்த நகைகள் விலையிலும் குறைந்த பட்ஜெட்டுடன் வாங்கக்கூடியதாயிருப்பதாலும், பேஷன் மற்றும் தினசரி அணிவதற்கான நகைகளாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வங்கி அடமானம் 9 கேரட் நகைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதால் இது முதலீட்டுக்கான பொருள் அல்ல.
9 கேரட் நகைகளின் முக்கிய அம்சங்கள்:
- தூய தங்கம்: 37.5% (9/24 காரட்).
- மீதம்: அலாய் உலோகங்கள் (செம்பு, வெள்ளி, துத்தநாகம்).
- விலை குறைவு, வடிவமைப்பு சுலபம்.
- பளபளப்பில் குறைவு, நிறம் மஞ்சள் கலர் மற்றும் சில சமயம் ஆண்டிக் தோற்றம்.
- மறுவிற்பனை மதிப்பு குறைவு.
- வங்கி அடமானம் கிடைக்காது.
- தினசரி அணிவதற்கும் பேஷன் பொருளாக ஏற்றது.
இது குறைந்த பட்ஜெட்டில் தங்க நகைகளை வாங்க விரும்புவோருக்கு பொருந்தும். ஆனால் இதை முதலீடாக பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். முதலீட்டுக்கு 22 காரட் தங்கம் பரிந்துரைக்கப்படுகிறது.