இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக IPL போட்டிகள், கடந்த வாரம் நிறுத்தி வைக்கப்பட்டன. முதன்முறையாக பெங்களூரு, பஞ்சாப் அணிகள் Play Off ரேஸில் முன்னணியில் இருந்ததால், IPL நிறுத்தம் அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
மீண்டும் IPL போட்டிகள் வருகின்ற மே 18ம் தேதி தொடங்கி, ஜூன் 3ம் தேதி வரை நடைபெறுகின்றன. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், அணிகளுக்கு மிகுந்த நஷ்டத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 11 தொடங்கி 15 வரை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான இறுதி அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.
இதில் IPL தொடரில் விளையாடி வரும் Aiden Markram, Lungi Ngidi, Tristan Stubbs, Dewald Brevis, Faf Du Plessis, David Miller உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேற்கண்ட வீரர்கள் அனைவருமே அணிகளின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி ஆட்டமொன்றில் தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. ஜூன் 3 முதல் 6 வரை இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. எனவே மே 26ம் தேதியே வீரர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டுமென்று, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தாயகம் திரும்பினால், IPL ஆட்டத்தில் எந்தவித சுவாரஸ்யமும் இருக்காது. இதனால் BCCI என்ன செய்வது என்று தெரியாமல் திணறித் தவித்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முக்கியம் என்பதால் BCCI பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு மசியவில்லையாம்.
இதேபோல ஆஸ்திரேலிய வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக IPL தொடரை புறக்கணித்தால், மொத்தமாக IPL படுத்தே விடும். இந்த சிக்கலை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் BCCI திண்டாடி வருகிறது. மேற்கண்ட இருநாட்டு வீரர்களும் இல்லை எனில், IPL போட்டிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் போவதுடன், ஸ்பான்ஸர்ஷிப்பும் மொத்தமாக அதலபாதாளத்துக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.