தொடர்ச்சியாக 2முறை Play Off ரேஸில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இது சென்னை அணியின் ரசிகர்களை மிகப்பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர் தோல்விகளால் பாடம் கற்ற CSK, தற்போது இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்தெடுத்து வருகிறது.
தோல்விகள் குறித்து சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ”எங்களின் பிளேயிங் லெவனை கட்டமைத்து, 2026ம் ஆண்டில் வலிமையாக Comeback கொடுப்போம், ” என்றார். இந்த நிலையில் நடப்பு IPL தொடருடன், 5 முன்னணி வீரர்களை கழட்டிவிட சென்னை அணி முடிவு செய்துள்ளதாம்.
அந்தவகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜிம்மி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா மற்றும் டெவன் கான்வே ஆகிய ஐவரும், CSKவில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இவர்களுக்கு பதிலாக இளம்வீரர்களை அணியின் உள்ளே கொண்டுவர தோனி, திட்டம் தீட்டி வருகிறாராம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சின்னச்சாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.