உலக பொருளாதாரத்தில் நீண்ட காலமாக அமெரிக்க டாலர் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சர்வதேச வர்த்தகம், எண்ணெய் பரிவர்த்தனை, முதலீடு என பல துறைகளில் டாலர் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், டாலரின் பலம் குறைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முதலாவது காரணம், அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார சவால்கள். பணவீக்கம் அதிகரித்துள்ளதால், வட்டி விகித உயர்வு மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை சற்றே குறைந்துள்ளது. இரண்டாவது, சர்வதேச அரசியல் மாற்றங்கள். சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்களது சொந்த நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய முயற்சிக்கின்றன. இது “டீ-டாலரைசேஷன்” (De-dollarization) என்ற புதிய Trend – ஐ உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் “அமெரிக்கா-முதலிடம்” அதாவது America First என்ற கொள்கையின் கீழ், டாலரின் ஆளுமையை நிலைநிறுத்த பல வர்த்தக மற்றும் வரி திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் தற்போதைய சூழலில், அவை பெரும்பாலும் நீடிக்கவில்லை என்றே தெரிகிறது. எனினும், டாலரின் வீழ்ச்சி உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இன்னும் உலக வர்த்தகத்தின் பெரும்பாலான பகுதி டாலரில் நடைபெறுகிறது. ஆனால் நீண்ட காலத்தில், டாலரின் ஆதிக்கம் நிலைகுலையக்கூடும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கை.
இப்போது எழும் கேள்வி என்னவென்றால் டாலர் முற்றிலும் பலம் இழக்குமா? உடனடியாக அதற்கான வாய்ப்பு இல்லை. உலகின் பெரும்பாலான பரிவர்த்தனைகள் இன்னும் டாலரிலேயே நடைபெறுகின்றன. அமெரிக்காவின் தொழில்நுட்ப, நிதி, இராணுவ வலிமை காரணமாக, டாலர் இன்னும் சில காலம் முன்னிலை பெற்றே இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் அதன் ஆதிக்கம் குறையக்கூடும் என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை.
டாலரின் ஆளுகை இன்னும் தொடர்ந்தாலும், அதற்குச் சவால் தலைதூக்கிவிட்டது. உலகம் பல நாணயங்களின் சமநிலைக்குள் நகரும் போக்கில் இருக்கிறது. அப்படியானால், டிரம்ப் போட்ட திட்டங்கள் குறுகிய கால பலனைத் தந்தாலும் நீண்டகாலத்தில் வீண் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.