Thursday, April 3, 2025

சங்ககராவை ‘Dating’ செய்யும் மலைக்கா? இணையத்தில் ‘தீயாய்’ பரவும் புகைப்படம்

கடந்த மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற, ராஜஸ்தான்-சென்னை இடையிலான போட்டியில் CSKவை வீழ்த்தி, RR முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேநேரம் அடுத்தடுத்து தோல்விகளாலும் வீரர்கள் தேர்வாலும், சென்னை அணி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

போட்டியின்போது பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, ராஜஸ்தான் ஜெர்சி அணிந்து Match பார்த்தார். தற்போது ராஜஸ்தான் அணியின் இயக்குனராக இருக்கும் முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்ககரா, மலைக்கா இருவரும், டக்அவுட்டில் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம், இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதைப்பார்த்த பலரும் சங்ககரா-மலைக்கா இருவரும், Dating செய்து வருகின்றனரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர்- மலைக்கா இருவரும் அண்மையில், தங்களது காதலை முறித்துக் கொண்டனர்.

இந்தநிலையில் குமார் சங்ககராவுடன் இணைத்து மலைக்கா கிசுகிசுக்கப் படுகிறார். ஆனால் இருவரும் இதுகுறித்து விளக்கமோ, மறுப்போ இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news