மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
மணிப்பூரில் பதற்றத்தை தணிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை தடை செய்யப்பட்டது.
இந்தநிலையில், மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில், செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதிகளில் ரெயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி செல்லவுள்ளார்.