பாஜக கூட்டணிக்கு எதிராக மிக கடுமையாக பேசி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக மவுனமாக இருந்து வந்தார். அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்த போது பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையையும் மிக கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார். தற்போது, மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உருவாகி உள்ளதால் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து விலகப்போவதாக நான் கூறவே இல்லை. திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.