இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்க்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட போது அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்கார் படத்தின் ஃபோஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதற்குத்தான் படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுத்துள்ளார்களே என்று நீங்கள் கேட்கலாம். இப்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. வீடுகளில் ஸ்மார்ட் டிவி இருக்கிறது. ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒரு படத்தை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கமாட்டார்கள், தவறான பாதைக்கு போகமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
யார் செய்தாலும் தவறு தவறுதானே. எனவே விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.