பிரியாணி என்பது எல்லோருடைய விருப்ப உணவாக மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பிரியாணி சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கையும் அதன் மீதான மோகமும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இரவில் அதிகமாக மசாலா, எண்ணெய், காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் தரும். பிரியாணி போன்ற கொழுப்பு மற்றும் காரம் அதிகமான உணவுகள் செரிமானத்திற்கு சிரமம் ஏற்படுத்தலாம்.
பிரியாணி போன்ற காரமான உணவுகள் இரவில் சாப்பிடும்போது, அது தூக்கத்தை பாதிக்கக்கூடும். அமிலம் அதிகரிக்கும்போது, இது தூக்கத்தில் இடையூறாக செயல்படலாம்.
இரவில் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டால் ஜீரண சக்தி குறைந்து மெட்டபாலிசம் பாதிக்கப்படும். பிரியாணி சேர்க்கப்படும் அதிகப்படியான மசாலாவால் வயிற்றுப்புண் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும்.
பொதுவாக மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும் சரி. கலோரி குறைவாக உள்ள இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.