Friday, March 28, 2025

கண்ணா ரெண்டு லட்டு ‘தின்ன’ ஆசையா ‘அந்த’ 2 விதிகளை நீக்கும் BCCI?

கடந்த வருடம் IPL தொடரில் வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்து எப்படியும் ஸ்கோர் 300க்கு மேல போயிரும் போல என்று ரசிகர்கள் ஒவ்வொரு மேட்சின் போதும் ‘ஜெர்க்’ ஆகினர். அந்தளவுக்கு ‘தார் ரோடு’ போல பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில், BCCI மைதானங்களை தயார் செய்திருந்தது.

இதனால் விக்கெட் எடுப்பதை விடவும் பேட்ஸ்மேன்களை, ரன்கள் எடுக்க விடாமல் தடுப்பது தான் பவுலர்களுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. அதேபோல கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் Impact வீரர் நடைமுறையும் போட்டிகளின் மீதான சுவாரஸ்யத்தை குறைத்தன.

11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்கள் ஆடியது போலவே,போட்டிகள் இருப்பதாக ரசிகர்களும் இந்த புதிய விதிமுறைக்கு மிகுந்த அதிருப்தி தெரிவித்தனர். இந்தநிலையில் மேற்கண்ட 2  விதிமுறைகளையும் IPL தொடரில் இருந்து, BCCI நீக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் நடைபெற்ற BCCI மீட்டிங்கில், அனைத்து கேப்டன்களும் Impact வீரர் தேவையில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் BCCIயும் சற்று இறங்கிவந்துள்ளதாம். மறுபுறம் நடப்பு தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் ஏற்ற வகையில், Pitch தயார் செய்யப்படும் என்றும் BCCI உறுதி அளித்துள்ளதாம்.

இந்த 2 விதிகளும் நடைமுறைக்கு வந்தால், இந்த 18வது IPL தொடரின் சுவாரஸ்யம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news