Monday, March 31, 2025

சதம் அடிச்சும் ‘புண்ணியம்’ இல்ல ‘முடிவுக்கு’ வரும் Ishan கேரியர்?

இளம்வீரரும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷனை, சொல்பேச்சு கேட்கவில்லை என்று காண்ட்ராக்டில் இருந்து BCCI நீக்கியது. மேலும் ஒரு அடியாக தாய்க்கழகமான மும்பையும் அவரை அணியில் தக்க வைத்துக்கொள்ளவில்லை.

இதையடுத்து நடப்பு தொடரில், SRH அணிக்காக இஷான் ஆடிவருகிறார். இந்த சீஸனின் முதல் சதத்தை ராஜஸ்தானுக்கு எதிராக அடித்து, தன்னுடைய பார்மையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதனால் BCCI காண்ட்ராக்டில் அவர் மீண்டும் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இஷானுக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இதேபோல நீக்கப்பட்ட மற்றொரு வீரர் ஷ்ரேயஸ் அய்யர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன்னை நிரூபித்துக் காட்டினார்.

இதனால் BCCI தன்னுடைய காண்ட்ராக்டில் மீண்டும், ஷ்ரேயஸுக்கு இடம் அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இஷானை சேர்க்க தொடர்ந்து தயக்கம் காட்டுகிறது. காண்ட்ராக்ட் லிஸ்டில் இடம்பெறாத வீரர்கள் இந்திய அணிக்காக ஆடமுடியாது என்பதால், இஷானின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

BCCIயின் இந்த காண்ட்ராக்ட் A+, A,B,C என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. A+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், A பிரிவில் இடம்பிடிக்கும் வீரர்கள் வருடத்துக்கு 5 கோடி ரூபாயும் ஊதியமாகப் பெறுவர்.

இதேபோல B மற்றும் C பிரிவுகளில் இடம்பிடிக்கும் வீரர்கள், முறையே ஆண்டுக்கு 3 மற்றும் 1 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news