‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்தவர் அனுஷ்கா ஷெட்டி. அதன் பிறகு அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்’காட்டி’ . கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் உருவான இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியானது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘காட்டி’ வெளியானாலும் அப்படத்தின் முதல் நாள் வசூல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது
இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். ஜெகபதி பாபு, ராஜு சுந்தரம், ஜான் விஜய், ஜிஷு சென் குப்தா, லாரிசா போனசி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது.அதாவது, அனுஷ்கா ஷெட்டிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, இந்த படத்திற்கு பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் எதிர்பாராத வசூல் கிடைத்தது. Box Office Collection தகவலின் படி, ₹50 கோடி பொருட்செலவில் உருவானஇந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வெறும் ₹4 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
இதில் இந்தியாவில் இந்த திரைப்படத்தின் வசூல் சுமார் ₹2.5 கோடி எனத் தெரிகிறது. முதல் நாளில் 10 கோடியாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் பாதி வசூல் கூட காட்டி படத்திற்கு வரவில்லை.மேலும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறையில் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆனால் மட்டுமே படுதோல்வியில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையென்றால் காட்டியை யாராலும் காப்பாற்ற முடியாது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.