அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து இருப்பதால் ‘நேட்டோ’ படை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நேட்டோ நாடுகளுக்கு ஏதேனும் தாக்குதல் என்றால் உடனடி பதிலளிக்கப்படும். இதையே மையமாக கொண்டு மத்திய கிழக்கில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ‘அரபு நேட்டோ’ மாதிரியான படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் கத்தாரில் நேற்று முன்தினம் நடந்தது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றது. இது நமது நாட்டுக்கு தீவிர எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் மொத்தம் 16 நாடுகள் உள்ளன. இதில் 15 நாடுகள் இஸ்லாமிய அரபு நாடுகள். இவற்றில் சவுதி அரேபியா, ஈராக், ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், சிரியா, ஏமன், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீன், ஓமன், கத்தார், குவைத், பக்ரைன் அடங்குகின்றன. இதில் இஸ்ரேல் மட்டுமே யூத நாடு.
இஸ்ரேலுக்கும் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பிரச்சினை உள்ளது. பாலஸ்தீனத்தின், காசாவில் போர் நடந்து வருகிறது. கத்தார் மீது அண்மையில் இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி, ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பின்னணியில், அரபு-இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ‘அரபு நேட்டோ’ படையை உருவாக்கும் யோசனை கத்தார் கூட்டத்தில் உதித்தது. கூட்டத்தில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் கலந்துகொண்டு கலந்தாலோசித்தனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்தக் கூட்டத்தில் பேசினார்.
ஏற்கெனவே சவுதி முயற்சி செய்த திட்டம் இப்போது மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது எகிப்து பெரிய ராணுவ சக்தியாகும். பாகிஸ்தான் மட்டும் அணுஆயுதம் வைத்திருப்பதால் அதன் பங்கு முக்கியமானதாக இருக்கும். அத்தகைய கூட்டுப் படை உருவானால், அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சவால் ஆகலாம். குறிப்பாக பாகிஸ்தானை தாக்கினால், ‘அரபு நேட்டோ’ நாடுகள் ஒன்றுசேர்ந்து இந்தியா மீதும் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
