Thursday, May 8, 2025

கோடை காலத்தில் கற்றாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கோடை காலத்தில் கற்றாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல, குடலுக்கும் கூட நன்மை தரும். கற்றாழை ஜெல்லை எடுத்து கழுவி விட்டு சாப்பிட்டால் ​​உங்கள் செரிமான அமைப்பை அமைதிப்படுத்த உதவும்.

கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக செரிமான பிரச்சனை ஏற்படுத்தும் போது கற்றாழை சாப்பிடுவது நல்லது.

கற்றாழை ஒரு மென்மையான நச்சு நீக்கியாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

Latest news