ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இந்த புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.இருப்பினும், இது தொடர்பாக UIDA இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்த நிலையில் தற்போது முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயருகிறது. இதனைப்போவே புகைப்படம் மாற்றம் மற்றும் பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆதார் அட்டை வங்கி முதல் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகள் வரை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
