Friday, September 26, 2025

தலைவலி சாதாரணமா? மூளை புற்றுநோயா? அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்து!

தலைவலி வந்தால் சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடுகிறோம். ஆனால் சில சமயம் அந்தத் தலைவலியே ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அது மூளை புற்றுநோய் எனப்படும் கடுமையான நோயின் ஆரம்ப சிக்னல்-லாக கூட இருக்கலாம்.

சரி, மூளை புற்றுநோய் என்றால் என்ன? மூளையில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டியாக மாறுவது தான் மூளை புற்றுநோய். இதற்கு இரண்டு வகைகள் உள்ளன. Benign என்று சொல்லப்படும் தீவிரமற்ற வகை. மற்றொன்று தீவிரமான malignant வகை. முதல் வகை கட்டி மெதுவாக வளர்ந்து பெரும்பாலும் ஆபத்தில்லாமல் இருக்கும். ஆனால் malignant வகை தீவிர கட்டி வேகமாக பரவி, உயிரை கூட குடித்துவிடும்.

அதன் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம். மீண்டும் மீண்டும் வரும் தலைவலி, திடீரென வாந்தி, பார்வை மங்கல், நடையில் தடுமாற்றம், நினைவில் குறைவு, பேச்சு தடைகள், கைகள்–கால்களில் பலவீனம் போன்றவை கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல் தாக்கம், radiation, சுற்றுப்புற சூழல் மற்றும் உடல் நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பல்வேறு விதம் இருக்கின்றன. அறுவை சிகிச்சை, radiation, chemotherapy போன்றவை. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை வெற்றிகரமாக நடக்கும் வாய்ப்பு அதிகம்.

அடிக்கடி தலைவலி, பார்வை பிரச்சினை, அல்லது ஞாபகக் குறைபாடு போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. முன்னேச்சரிக்கை தான் உயிரைக் காப்பாற்றும் முக்கிய மருந்து.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News