Tuesday, December 10, 2024

அயர்ன் மேனின் அடுத்த படம் ‘‘தி பார்க்கரா”?

‘அயர்ன்மேன் 3’ படத்தை இயக்கிய ஷேன் ப்ளாக் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராபர் டவுனி ஜூனியர் நடிக்கவுள்ளார்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை,

2019-ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிந்தது.

இதில் டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராபர்ட் டவுனி ஜூனியர்.

இவர் நடித்த இந்தக் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவரது அலட்சியமான உடல் மொழியும், கிண்டல் நிறைந்த பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவது போலக் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இப்படத்துக்குப் பிறகு ‘டூலிட்டில்’ என்ற படத்தில் ராபர்ட் டவுனி நடித்திருந்தார்.

ஆனால் அப்படம் பாக்ஸ் அபீஸில் பெரும் தோல்வியை தழுவியது மட்டுமின்றி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

அதன் பிறகு எந்தவொரு படத்திலும் ராபர்ட் டவுனி ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் ‘அயர்ன்மேன் 3’படத்தை இயக்கிய ஷேன் ப்ளாக் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராபர் டவுனி ஜூனியர் நடிக்கவுள்ளார்.

‘தி பார்க்கர்’ என்ற புகழ்பெற்ற நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தை அமேசான் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று தகவல் வந்துள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!