இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் இன்றய (சனிக்கிழமை) மீண்டும் முடங்கியது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து IRCTC அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் அதன் X தளத்தில் பயனர்களின் குறைகளை பதிலளித்துள்ளது. காலை 10:07 மணியளவில் IRCTC இணையதளத்திற்கு 180 புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
