ஈராக்கில் புதிதாக திறக்கப்பட ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராகின் வாசித் மாகாணம், குட் நகரில் உள்ள ஹைப்பர் மாலில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தீ விபத்தில் பலர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை அடுத்து கட்டிட உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.