கடந்த 2025 ஜூன் 13, வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலால், ஈரானின் முக்கிய அணு மற்றும் இராணுவ தளங்கள் தகர்ந்தன. பலர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக – ஈரான் தன்னுடைய பல நூறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயக்கி, இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்கியது. இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழநிலையில் யாருக்கு உண்மையான மேலாதிக்கம்? என்ற கேள்வி எழுகிறது. அதன் அடிப்படையில் ஈரான் எண்ணிக்கையில் பெரியது. 610,000 செயலில் உள்ள வீரர்கள், 350,000 ரிசர்வ் – மொத்தம் 9.6 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதுவே இஸ்ரேல், மிகச் சிறிய நாடாக இருந்தாலும், அதிரடியானது. 1.7 லட்சம் செயலில் உள்ளவர்கள், ஆனால் 4.6 லட்சம் ரிசர்வ், அதாவது முழு உழைப்பின் போது தயாராக இருப்பவர்கள் அதிகம்.
வான்படைத் தளத்தில் இஸ்ரேல் தலைசிறந்தது. அமெரிக்காவின் நவீன எஃப்-35, எஃப்-15, எஃப்-16 போர் விமானங்கள் – அதிவேகத்தில் பறக்கும், கண்ணுக்கு தெரியாமல் தாக்கும்.
ஈரான் விமானங்களை பயன்படுத்தவில்லை. அவை பழைய ரஷ்ய தயாரிப்புகள், பராமரிப்பு இன்றி பலகீனமடைந்தவை. ஈரான் அதன் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையே நம்புகிறது. ஷாஹெட், எமாத் (Emad) ,fattah போன்றவை – 2,500 கிலோமீட்டர் வரையிலும் தாக்க முடியும். அதிலும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் – பிடிக்கவே கடினம். மாதத்திற்கு 300-500 ஏவுகணைகள் தயாரிக்கிறது. இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக இதற்கே எதிரொலி கொடுக்கிறது.
“IRON DOME,”, “டேவிட் ஸ்லிங்”, “ஆரோ 3″, ” பேட்ரியாட்”… இவை அனைத்தும் வித்தியாசமான தூரங்களில் தாக்குவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள்.இதில் 90% வெற்றி விகிதம் உள்ளது. அமெரிக்காவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவும் சேரும் போது, இஸ்ரேலின் வான்படை பாதுகாப்பு உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் முக்கிய அணு தளங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளது. ஈரான், “நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்” என்று சொல்கிறது. ஆனால் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. ஆயுதம் தயாரிக்க 90% இருந்தாலே போதுமானது தான்.
இஸ்ரேல், தன் அணு ஆயுதங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் 80 முதல் 400 அணு வெடிகுண்டுகள் இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. டிமோனாவில் உள்ள ரகசிய அணு ஆய்வகம் இதற்குப் பிணையமாக உள்ளது.
இந்த யுத்தம் இன்னும் தொடரும். ஆனால், இந்த தருணத்தில் aerial control-ல், missile defence-ல், மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளில் இஸ்ரேல் முன்னணியில் இருக்கிறது. எண்ணிக்கையில் ஈரான் பெரியதாக இருந்தாலும், துடிப்பில் இஸ்ரேல் அதீதமாகவே செயல்படுகிறது.