Thursday, July 31, 2025

இஸ்ரேலின் முக்கிய தலைகளுக்கு ஈரான் அனுப்பிய திக் திக் தகவல்! சுழற்றி அடிக்கும் புது புயல்! இடையில் அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு!

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஈரானியர்களிடமிருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து இஸ்ரேலின் சில தகவல்களை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்களில் இவற்றை பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மிரட்டல் அழைப்புக்கள் நேற்றைய தினம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மிரட்டல் அழைப்புக்கள் மட்டுமல்லாமல் சில குறுந்தகவல் அதாவது SMS-களும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுவது புதிய சர்ச்சைகளை கிளப்பி விடுவதாக இருக்கிறது.

மேலும் இந்த மிரட்டல் அழைப்பு சம்பவம் இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சீரியஸாக எடுத்துள்ள இஸ்ரேல் அரசு இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதாகவும் தெரிகிறது. ஈரான் – இஸ்ரேல் போரில் தொடர்ந்து ஈரான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இஸ்ரேல், ஈரானுக்கு சிம்மசொப்பனமாகவே உள்ளது. மேலும் தற்போதைய நகர்வுகளை பார்க்கும்போது இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற நிலைதான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இது போதாது என்று இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இது போர் இன்னமும் தீவிரம் அடையப்போவதற்கான அறிகுறியாகவே சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News