Thursday, July 31, 2025

விரைவில் மீண்டும் ஈரான்-இஸ்ரேல் போர்! ட்ரம்பின் பயங்கர எச்சரிக்கை! பற்றிக்கொண்ட பதற்றம்!

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைப் பற்றி நேற்று ஊடகங்களிடம் பேசியபோது அவர் கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், ‘அடுத்த வாரம் ஈரானுடன் பேச உள்ளோம். அந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம், எனக்குத் தெரியவில்லை, ஈரான் மற்றும் இஸ்ரேல் தற்போது சோர்வாக இருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதற்கு பின் இருவரும் சண்டை நிறுத்தம் என்ற முடிவை எடுத்தனர். ஒரு நாள் போர் ஆரம்பமாகலாம் என நினைக்கிறேன், அது விரைவில் நடக்கலாம். ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அணு ஆயுதம் வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம் மற்றும் அணு ஆயுதத்தை நாங்கள் அழித்தோம்’ என உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் பலமாக அறைந்ததுள்ளதாக ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்தது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. மேலும் அவர் ‘அமெரிக்க ஜனாதிபதி அசாதாரண வழிகளில் நிகழ்வுகளை மிகைப்படுத்தி கூறியிருப்பதாகவும்

அவருக்கு இந்த மிகைப்படுத்தல் தேவைப்பட்டாலும் இந்த வார்த்தைகளைக் கேட்ட எவரும் அவைகளுக்கு பின்னால் மற்றொரு உண்மை இருப்பதைப் புரிந்துகொண்டுள்ளனர் என்று காட்டமாக கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News