ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும்.
இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும். ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும். இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.