நடப்பு IPL தொடரில் ஏறக்குறைய 80 சதவீத போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 2 வாரங்களில் எந்த அணி கோப்பையைத் தூக்கப் போகிறது என்பது தெரிந்து விடும். தற்போதைய நிலவரப்படி Play Off இடத்திற்கு 7 அணிகள் முட்டி மோதுகின்றன.
இந்த 18வது சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்தநிலையில் நடப்பு தொடரில் மோசமாக சொதப்பிய வீரர்களை வைத்து, மோசடி பிளேயிங் லெவன் ஒன்றை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து மட்டும் 5 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். லிஸ்டில் ஓபனர்களாக CSK அணியின் ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திராவும் ஒன் டவுனில் இஷான் கிஷனும் உள்ளனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் இடம்பெற்று இருக்கின்றனர்.
பின்வரிசையில் தீபக் ஹூடா, அஸ்வின், பதிரனா, முஹம்மது ஷமி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. Impact வீரர் இடத்தை முகேஷ் சவுத்ரிக்கு வழங்கி இருக்கின்றனர். இந்த அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளனர். லிஸ்டில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.