கடந்த காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் அதாவது இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறியுள்ளார்.
அமெரிக்க சந்தைக்கு ஐபோன் உற்பத்திக்கான முக்கிய மையமாக இந்தியா இப்போது மாறியுள்ளது என்றும், அதே நேரத்தில் சீனா அமெரிக்கா அல்லாத பிராந்தியங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
உலகளவில், ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 10% அதிகரித்து, 94 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் ஆப்பிள் சாதனை வருவாய் ஈட்டிய இரண்டு டஜன் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குக் கூறினார்.