அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்புகள் காரணமாக, ஐபோன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போனின் விலை $350 வரை அதிகரிக்கலாம். தற்போது அமெரிக்காவில் இந்த மொபைல் போன் $1,199க்கு விற்கப்படுகிறது; இதன் விலை 30 சதவீதம் வரை உயரலாம் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
ஆப்பிள் தனது பெரும்பாலான தயாரிப்புகளையும் சீனாவில் தயாரிப்பதால், இந்த வரிகள் நிறுவனத்தின் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மூன்று வர்த்தக நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 சதவீதம் சரிந்து, சுமார் $640 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளது.
சில நிபுணர்கள், ஆப்பிள் தனது தயாரிப்புகளை அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்தால், ஐபோன் விலை $3,500 வரை உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். இந்த சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உயர்வு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை பாதிக்கக்கூடும்.