ஜியோ, ஏர்டெல் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், BSNL மீண்டும் இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக உள்ளது. BSNL-ன் நடவடிக்கை முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
BSNL தனது 4G சேவையை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் மற்றும் டேட்டாவை வழங்க ரூ.47,000 கோடி முதலீடு செய்கிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 4G நெட்வொர்க் கிடைப்பதற்கும் வாடிக்கையாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் டேட்டா சேவையைப் பயன்படுத்தும் வகையில் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் BSNL ரூ.47,000 கோடி முதலீடு செய்கிறது.
நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சம் 4G BSNL டவர்கள் அமைக்கப்பட உள்ளன. நெட்வொர்க்கை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 4G சேவை விரிவாக்கத்துடன், BSNL 5G சேவை குறித்தும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விரைவில் BSNL வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற 4G சேவை கிடைக்கும். இதையடுத்து BSNL 5G சேவைக்கு மேம்படுத்தப்படும் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.