மிரட்டிய எரிமலை வெடிப்பு…..பீதியில் உறைந்த மக்கள்

235
Advertisement

கடுமையான எரிமலை வெடிப்பால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இத்தாலி நாட்டின் கிழக்கு சிசிலி பகுதியில் எட்னா மலை உள்ளது. இந்த மலைப் பகுதியில் வியத்தகு மின்னல்கள் சமீபத்தில் தோன்றின. அதைத் தொடர்ந்து புயல், இடியுடன் மழைபெய்யத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இத்தகைய புயல் மிகவும் அரிதானவை. கடலுக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் இவை நிகழலாம்.

இதுபற்றி இத்தாலி நாட்டின் இயற்பியல் மற்றும் எரிமலைக்கான தேசிய நிறுவன நிபுணர் கூறியபோது, இதுபோன்ற எரிமலைப் புயல்கள் அரிதானவை. பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி எட்னா எரிமலைமீது கடுமையான மின்னலை உருவாக்கியது என்றார்

இந்த எரிமலை வெடிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை..