Wednesday, July 2, 2025

இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் 2010ம் ஆண்டு எந்திரன் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில், ‘எந்திரன்’ படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தனிநபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துக்களை முடக்கியிருக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமலாக்கத் துறை ஏப்ரல் 21க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news