முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, கோலிவுட் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். அதாவது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் உறுதுணையாக நிற்கிறது . இதனைத் தொடர்ந்து இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.
உதயநிதியும் இது போலத்தான் தனது கெரியரை தொடங்கினர், அதாவது, இன்பநிதி தனது அப்பா வழியில் திரைப்பட விநியோகஸ்தராக தனது கெரியரை தொடங்கியுள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கியது.
உதயநிதியின் முதல் படம் விஜய், திரிஷா நடித்த ‘குருவி’ திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.மேலும், கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலமாக விநியோகஸ்தராக களமிறங்கினர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பல வெற்றி திரைப்படங்களை அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் திரையில், 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து 2012-ம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். இந்த திரைப்படம் தொடர்ந்து ‘மனிதன்’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’, ‘சைக்கோ’,’நெஞ்சுக்கு நீதி’ என பல படங்களில் நடித்தார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த சூழலில் 2023-ம் ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்டார் உதயநிதி, அதன் பின்னர் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார். மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவில் உதயநிதி தான் முதலமைச்சர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதனைப்போலவே, அப்பா பாணியை இன்பநிதி விநியோகஸ்தராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து விரைவில் கதாநாயகனாகவும் இன்பநிதி அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.
எனவே, உதயநிதியை போல இன்பநிதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இதனின் தொடக்கமாக தான் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.