Saturday, May 17, 2025

வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்..இந்த 14 மாவட்டங்களுக்கு மழை

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கும் விதமாக மழை வர உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4நாட்களுக்கான கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கோவை, நீலகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news