Tuesday, September 30, 2025

சென்னையில் விரைவில் தொழில்துறை சார்ந்த அருங்காட்சியம் – அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னையில், விரைவில் தொழில்துறை சார்ந்த அருங்காட்சியம் அமைய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில், “ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்சின்” 80 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், தொழில்துறை அமைச்சர் T.R.B. ராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, புதிய இலட்சினையை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை வர்த்தக மையத்தில் அடுத்த மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், பாதுகாப்பு துறை சார்பில் விமான பாதுகாப்பு கண்காட்சி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டார்.

சென்னையில், விரைவில் தொழில்துறை சார்ந்த அருங்காட்சியம் அமைய உள்ளதாக கூறினார். திருப்பூரில் உள்ள ஜவுளி தொழில் துறைக்கும் தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News