ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் திருப்பதியில் தரையிறக்கப்பட்டது. திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்குமுன் சுமார் 30 நிமிடங்களில் விமானம் நடுவானில் வட்டமடித்துள்ளது.