ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம்

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.மணிக்கு 79 கி.மீ வேகம் வரை காற்று வீசிய நிலையில் புழுதிப்புயலால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டது.

Related News

Latest News