ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு பணக்கார அமைச்சர்கள் பற்றி ஆய்வு நடத்தியது. தேர்தலின்போது அமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது. அதன் முடிவில் இந்தியாவின் டாப் 5 அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சந்திரசேகர் பெம்மாசானி, தெலுங்கு தேசம் கட்சி
சந்திர சேகர் பெம்மாசானி ஜூன் 2024ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறைக்கான 28வது மாநில அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு 5,705 கோடி ரூபாய்.
டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி.
சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி.
நாராயண பொங்குரு
பொங்குரு நாராயணா இந்திய கல்வியாளர் ஆவார். 2014ல் ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொத்து மதிப்பு ரூ.824 கோடி.
பைரதி சுரேஷ்
பைரதி சுரேஷ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தற்போது கர்நாடக அரசில் கேபினட் அமைச்சராகவும், ஹெப்பால் எம்எல்ஏயாகவும் பணியாற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.648 கோடி.