இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 9.34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவையின் ஏற்றுமதி, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி 9.34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி 79.04 பில்லியன் டாலராக உள்ளது என்றும் இது கடந்தண்டு ஆகஸ்ட்டில் 84.99 பில்லியன் டாலராக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பொருட்களின் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகவும், சேவைகளின் இறக்குமதி 84.25 பில்லியன் டாலராகவும் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்திருப்பதாலும், இறக்குமதி குறைந்திருப்பதாலும் வர்த்தக பற்றாக்குறை 41.42 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
